» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்கிப்பிங்கில் உலக சாதனை: மாணவனுக்கு பாராட்டு விழா

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 7:20:06 PM (IST)தூத்துக்குடியில் ஸ்கிப்பிங்கில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி அருகே உள்ள மறவன் மடத்தை சேர்ந்த அமல்ராஜ் - சகாயராணி தம்பதிகளின் மகன் அ.ஜோ ஆண்டனி சாம். 12 வயது நிரம்பிய இவர் தூத்துக்குடி கணேசன்நகரில் உள்ள சின்னமணி நாடார் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் 46 நிமிடம் இடைவிடாமல் 6222 ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு நிமிடத்திற்கு 201 ஸ்கிப்பிங் என்ற கணக்கில் தொடர்ந்து 46 நிமிடங்கள் இடைவிடாமல் விளையாடி உள்ளார்.

லக்னோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோபல் வேர்ல்ட் ரிக்கார்டு அமைப்பினர் முன்னிலையில், அவரது சொந்த ஊரான மறவன்மடத்தில் வைத்து இந்த உலக சாதனையை .ஜோ ஆண்டனி சாம் படைத்துள்ளார். இந்நிலையில் உலக சாதனை படைத்த அவருக்கு, அவர் படித்து வரும் தூத்துக்குடி சின்னமணி நாடார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நேற்று (சனிக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த பாராட்டு விழாவுக்கு பள்ளியின் செயலர் பி.நடராஜன் தலைமை வகித்து, பள்ளி சார்பில் ரூ.10இ000 அன்பளிப்பாக வழங்கி பாராட்டி பேசினார். மேலும் மாணவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சு.ரெங்கநாதன் வரவேற்புரை ஆற்றி வாழ்த்தி பேசினார். ஆண்டனி சாமுக்கு பள்ளி முன்னாள் மாணவர் சந்தண முருகன் நினைவு பரிசினை வழங்கினார்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, மக்கள் தொடர்பு அலுவலரும்இ பேராசிரியருமான டாக்டர் அ.அசோக், பள்ளி ஆசிரியைகள் ஆ.சித்ரா, கோ.திருவேங்கடம் மற்றும் முன்னாள் மாணவர் வேல்முத்து ஆகியோர் உலக சாதனை படைத்த மாணவரை வாழ்த்தி பேசினர். ஆறாம் வகுப்பு ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, மகாதேவி, உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ் உள்பட அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவரை பாராட்டினர். ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.முத்து செல்வி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Thalir ProductsThoothukudi Business Directory