» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடல்

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 6:50:34 PM (IST)தூத்துக்குடியில் ஆல் கேன் பிரஸ்ட் சார்பில் பசுமை நாயகன், நடிகர்  விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. 

தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுழி காலனி பகுதியில் நடந்த இந்த நிகழ்வுக்கு ஆல் கேன் டிரஸ்ட் நிறுவுனர் வக்கீல்  மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில்,  உறுப்புனர்கள் மருதப்பெருமாள், முருகன், ஐய்யப்பன், ஜெயராஜ், மகேஸ்வரன், பாக்ஸர் மைக்கேல், வேல்பாண்டி, இசக்கி ராஜ், லெட்சுமணன், தினேஷ், கமல், அருண், அரோக்கியராஜ், செந்தில், ஆசிர், மற்றும் அனைத்து உறுப்பினர்களும் அந்த பகுதியில் உள்ள தன்னார்வளர்களும் கலந்து கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து விவேக் உருவப்படத்திற்கு மலர் தூவி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்துங்கநல்லூரில் உறுதிமொழி ஏற்புசெய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் நடிகர் விவேக் மறைவை யட்டி அவர் படத்துக்கு சமுக இடைவெளி கடைபிடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் நினைவாக மரக்கன்று நடப்பட்டது.  தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவது என உறுதி மொழி எடுக்கப்பட்டது. 

செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவசாய சங்க தலைவர் குமார்,  வாசகர் வட்டத் துணைத்தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் லெட்சுமணன் ஆகியோர்  முன்னிலை வகித்தார். தொடர்ந்து  விழிப்புணர்வு நடத்தி மரக்கன்று நடவேண்டும் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.  அதன் பின் நூலக வளாகத்தில்  மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூலகர் லெட்சுமணன், வழக்கறிஞர் தில்லை, கதிரேசன், மணக்கரை போஸ்ட் மாஸ்டர் காளி முத்து,  செந்தில், வாசகர் வட்டத்தினைத்தினைச் சேர்ந்த கோபால், பொறியாளர் சங்கரபாண்டியன், பரமசிவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory