» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக அக்கறை கொண்டவர் நடிகர் விவேக்: சகோ. மோகன் சி.லாசரஸ் புகழாரம்

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 1:16:31 PM (IST)

மூட நம்பிக்கைகளை அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்தியவர், சமூக அக்கறை கொண்டவர் நடிகர் விவேக் என ஜெபிக்கலாம் வாங்க நேரலை நிகழ்ச்சியில் மோகன் சி.லாசரஸ் புகழாரம் சூட்டி, அவரது குடும்பத்தினருக்காக சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார்.
 
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய தேவனுடையக் கூடாரத்தில் வாரந்தோறும் தொலைக்காட்சி, இணைய தளங்கள், உள்ளூர் சேனல்களில் ஜெபிக்கலாம் வாங்க நேரலை நிகழ்ச்சி சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இதில் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நமது ஊழியத்தின் சார்பில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருவசனப் பண்டிகையை கொண்டாடி வருகிறோம்.

இதன் மூலம் வேதவசனங்களை போஸ்டராக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. இந்தப் போஸ்டர்களை தங்களது கிராமங்களில் ஒட்ட வேண்டும் என நினைப்பவர்கள் 5,10,50 என வாங்கிக் கொண்டு போய் அவரவர் கிராமங்களில் ஒட்டுகின்றனர். நாங்கள் ஆள் வைத்து ஓட்டுவதில்லை. ஒட்ட போஸ்டர் கொடுக்கும் போது பிற வழிபாட்டுத் தலங்களிலோ, அல்லது அதன் அருகிலோ, அவர்களது சுவர்களிலோ, நோட்டீஸ் ஒட்டாதீர்கள் என எழுதப்பட்டுள்ள இடங்களிலோ, நோட்டீஸ் ஒட்டும்போது தர்க்கங்களிலோ ஈடுபடக்கூடாது என்ற வாசகங்கள் அச்சிட்ட விதி முறைகள் கொடுத்து அனுப்புகிறோம். இந்த விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கண்டிப்புடன் சொல்லித்தான் போஸ்டர்களை கொடுத்து வருகிறோம்.

விதிமுறைகள் இணைக் கப்பட்டுள்ளது. ஆனால் வார இதழ் ஒன்றில் மத வழிபாட்டுத்தலங்களில் கிறிஸ்தவ போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்களை வாங்கிச் சென்ற கிறிஸ்தவர்கள் தங்களது அறியாமையினால் செய்திருந்தால் அவர்களுக்காக அவர்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு தகவலும் எங்களுக்கு வந்துள்ளது எங்களை குற்றப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற செயல்களை செய்துள்ளதாக அறிகிறோம். அவர்களையும் இயேசு மன்னித்து ஆசீர் வதிப்பாராக. 
 
இந்த வாரப் பத்திரிகையில் இந்து கோவில்களில் கிறிஸ்தவ போஸ்டர்கள். மீண்டும் வம்பிழுக்கும் மோகன் சி.லாசரஸ் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் பொய்யானது. தாக்குகிறவர்களை நேசிக்க வேண்டும் என்று இயேசு எங்களுக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளார். பாஜகவினரும், மத அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இரட்சிக்கப்பட்டு பரலோகத்திற்கு வர வேண்டும் என்று ஜெபம் செய்கிறவர்கள் நாங்கள். அனைத்து அரசியல் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். எங்களுக்கு அனைத்து கட்சியினரும் சமம்.

தமிழகத்தில் பிரபலமான சமூக சிந்தனை கொண்ட நடிகர் விவேக் மரணம் தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு பேரிழப்பு. மூடநம்பிக்கை குறித்து விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தியவர். கிரீன் கலாம் என்ற அமைப்பை நிறுவி ஒரு கோடி மரம் நடுவதற்கு வித்திட்டவர். இளம் வயதில் மகனை இழந்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அன்னாரது மரணம் அவரது மனைவி, மகள்களுக்கு பேரிழப்பாகும். இவ்வாறு அவர் பேசினார். அவர்களுடைய குடும்பத்தினரின் ஆறுதலுக்காக மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

kumarApr 18, 2021 - 01:21:57 PM | Posted IP 162.1*****

nallavanaga, aduthavargal matha nambikaiku mathipu koduthu, athai avamathikkamal irunthale pothum...nichchayam sorkathai adaivargal....kovil suvatril matrumatha suvarotti ottuvathu migavum kandikkathakkathu.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory