» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திருடுபோன ரூ.6லட்சம் மதிப்புள்ள நகை மீட்பு : உரிமையாளரிடம் எஸ்பி ஒப்படைத்தார்!!

வியாழன் 8, ஏப்ரல் 2021 11:40:34 AM (IST)தூத்துக்குடியில் திருடுபோன ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். 

தூத்துக்குடி ரோச் காலனி பகுதியைச் சேர்ந்த ரீகாந்த் மனைவி ஆஷா (30) என்பவர் கடந்த 01.02.2021 அன்று தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆஷா கழுத்தில் இருந்த 17 சவரன் தங்க நகையை பறித்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துபாண்டி, வடபாகம் காவல் நிலைய காவலர் ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் தனிப்டையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதிலும், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததின் மூலமும் தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த சுடலைமணி மகன் நயினார் (21) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி எதிரியை கைது செய்து அவரிடமிருந்த சுமார் ரூ.6லட்சம் மதிப்பிலான 17 சவரன் தங்க நகை கைப்பற்றப்பட்டது. 

இன்று அந்த நகைகளை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில், அதன் உரிமையாளரான ரீகாந்த் மனைவி ஆஷா-விடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் ஒப்படைத்தார். இவ்வழக்கில் விவேகமாகவும், விரைந்தும் செயல்பட்டு, எதிரியை கண்டு பிடித்து நகையை மீட்ட தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

பின்னர் எஸ்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலின் போது கோவில்பட்டியில் 2 வழக்குகளும், தூத்துக்குடியில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரிய வன்முறைகள், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவ படையினர் 72 பேரும், 2வது அடுக்கில் 50 சிறப்பு காவலர்களும், 3 அடுக்கில் டிஎஸ்பி தலைமையில் 150 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சியினர் இதனை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தினசரி மாவட்ட ஆட்சியர், எஸ்பி பார்வையிட்டு வருகிறார்கள் என்றார். பேட்டியின் போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், முத்து கணேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், தனிப்பிரிவு தலைமை காவலர்கள் கந்த சுப்ரமணியன், மாரிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ப. சுகுமார்Apr 9, 2021 - 10:27:43 PM | Posted IP 162.1*****

Congratulation to the Police Team.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Thalir Products

Black Forest Cakes

Thoothukudi Business Directory