» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழை சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.1லட்சம் நிதி உதவி வழங்கல்

வியாழன் 8, ஏப்ரல் 2021 11:19:31 AM (IST)தூத்துக்குடியில் மாநகர பர்னிச்சர்ஸ் விற்பனையாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் பியர்ல் அரிமா சங்கம் சார்பில் ஏழை சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகள் ஞான அனுஷா (15) என்பவருக்கு 2 கிட்னிகளும் செயல் இழந்து சிகிச்சை பெறுவதற்கு மிகவும் சிரமபட்டு வந்தார். இதையறிந்த மாநகர பர்னிச்சர்ஸ் விற்பனையாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம் இணைந்து மாணவியின் அறுவை சிகிச்சைக்காக 1 லட்சம் ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து பணத்தை திரட்டினர்.

இதையொட்டி தூத்துக்குடி பெருமாள்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுமிக்கு, ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சிியில் அவர் பேசுகையில், பொதுவாக மனிதர்களுக்கு எவ்வளவு வசதிகள் இருந்தாலும், இதுபோன்று கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வருவது மிகக்குறைவு. இவ்வாறான சூழ்நிலையில் இச்சிறுமிக்கு உதவ முன் வந்து இந்த நிதியுதவி செய்ததற்கு எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அந்தச் சிறுமி சிறப்பான முறையில் சிகிச்சை பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாநகர பர்னிச்சர்ஸ் விற்பனையாளர் நலச் சங்க தலைவர் தர்மராஜ், அரிமா சங்க மாவட்ட தலைவர் தெய்வநாயகம், பியர்ல் அரிமா சங்க தலைவர் அபிராமி சந்திரசேகர், பொன்சீலன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன், தனிப்பிரிவு தலைமை காவலர்கள் கந்தன், மாரி உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

TUTICORIN MAKKALApr 8, 2021 - 02:28:15 PM | Posted IP 173.2*****

Great Help....Good service. வாழ்த்துக்கள்.Pray for speedy recovery of the girl's illness.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir Products


Thoothukudi Business Directory