» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ல் இடைத்தேர்தல் : சுநீல் அரோரா அறிவிப்பு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:39:20 PM (IST)

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சுநீல் அரோரா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.வசந்த குமார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி கரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய கோளாறுகளால் மரணம் அடைந்தார். அவரது மறைவால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது. அந்த தொகுதிக்கும் தமிழக சட்டசபை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 

இந்த தொகுதியில வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு மார்ச் 19-ம் தேதி கடைசி நாள் ஆகும்.வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20-ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 22-ம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்து மே மாதம் 2-ம் தேதிதான் இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கேரளத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு

கேரள மாநிலத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார். அதேபோல் மலப்புரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products

Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory