» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!

வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:14:09 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பச்சைபெருமாள் மகன் லட்சுமணன் (41), அண்ணா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மதுரைமுத்து (24) ஆகிய 2பேரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். பிரபல ரவுடிகளான இவர்கள் இருவரும் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam Pasumaiyagam







Thoothukudi Business Directory