» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவில் இன்று ரத உற்வசம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒன்பது நாளும் கோவிலில் விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி அளவில் ரத உற்வசம்நடந்தது. 

வழக்கமாக மாசித்திருவிழா தேரோட்டத்தின்போது பெரிய தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானையுடனும், பெரிய தேரைவிட சற்று சிறிய தேரில் தெய்வானை அம்பாளும், சிறிய தேரில் விநாயகரும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள். இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2 பெரிய தேர்களையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் 3 சிறிய தேர்களில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு செல்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவில் அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி- அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory