» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு!

வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:51:05 AM (IST)தூத்துக்குடியில் ஏழை மாணவியின் அறுவை சிகிச்சைக்காக இளைஞர்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன். கூலித் தொழிலாளி. இவரது மகள் அனுஷியா (15), அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு 2 சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணின் தயார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க உள்ளார். அடுத்த மாதம் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதற்கு ரூ.10லட்சம் வரை நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில், ஏழை மாணவியின் சிகிச்சைக்காக, Kalam Dream youngsters Achieving Foundation என்ற அமைப்பின் சார்பில் தூத்துக்குடி நகரில் இளைஞர்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesThalir Products

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory