» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பைகளை எரித்த நிறுவனத்திற்கு ரூ,1 லட்சம் அபராதம் : மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

வெள்ளி 26, பிப்ரவரி 2021 10:20:51 AM (IST)

திடக்கழிவு மேலாண்மை விதியினை முறையாக கடைபிடிக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் மற்றும் வனிக நிறுவனங்களை பொறுத்தவரை மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை, உயிர் நச்சுக்கழிவுகள் என பிரித்து சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் உருவாகும் உயிர் மருத்துவக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 21.02.2021 அன்று எட்டையாபுரம் ரோடு பகுதியில் மேற்படி விதிமுறைகளுக்கு மாறாக தனியார் மருத்துவமனை கழிவுகள் கொட்டி எரிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் அவர்களின் தலைமையில், பொது சுகாதாரப் பிரிவு அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்ததில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திவருவதும், மருத்துவமனை கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தாமல் தீவைத்து எரித்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்படி நிறுவனத்திற்கு ரூ.1.06 இலட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனத்தினர் தங்களால் உருவாக்கப்படும் கழிவுகளை முறையாகப் பிரித்து மாநகராட்சி பொது சுகாதார பணியாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவமனைகள் கழிவுகளை பிரித்துக் கொடுப்பதோடு உயிர் மருத்துவ கழிவுகளை உரிய முறைப்படி பிரித்து அதற்கென பிரத்தியேகமாக செயல்படும் தனியார் நிறுவனங்களின் மூலம் அகற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆணையர் சரண்யா அறி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மாநகராட்சி பணியாளர்கள் கரோனா தடுப்பூசி 

கரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா நோய் தொற்று தடுப்பூசி வழங்க பதிவு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வின்மையின் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் நிலவி வந்த நிலையில். விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று மாநகராட்சி ஆணையர், மாநகர் நல அலுவலர், சுகாதார அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என  125க்கும் மேற்பட்டோர் கரோனா நோய் தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழன்Feb 28, 2021 - 10:38:43 AM | Posted IP 162.1*****

நம்ம அக்கா எப்பவுமே சூப்பர். வாழ்த்துக்கள் அரி அக்கா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thalir Products
Thoothukudi Business Directory