» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் குத்திக்கொலை: நண்பர்கள் வெறிச்செயல் - நள்ளிரவில் பயங்கரம்!!

வெள்ளி 26, பிப்ரவரி 2021 8:41:47 AM (IST)

தூத்துக்குடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக் கொன்ற அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36). கூலித் தொழிலாளி. பாலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பச்சைபெருமாள் மகன் லட்சுமணன் (41), அண்ணா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மதுரைமுத்து (24). இவர்கள் மூவரும் நண்பர்கள். லட்சுமணனும் மதுரைமுத்துவும் மாரிமுத்துவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்களாம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாரிமுத்து வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டில் பொருட்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது அவரது நண்பர்கள் தான் அங்குவந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த அவர் லட்சுமணனையும், மதுரைமுத்துவையும் "எனது வீட்டில் ஏன் திருடினீர்கள்?" என்று கேட்டு கண்டித்தாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் லட்சுமணன் மற்றும் மதுரை முத்து அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவு மாரிமுத்துவை மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் நல்ல போதையில் இருந்த மாரிமுத்துவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thalir Products





Thoothukudi Business Directory