» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

வெள்ளி 26, பிப்ரவரி 2021 8:23:38 AM (IST)

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவா் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தைச் சோ்ந்த யோவான் அற்புதராஜ் (36) அங்குள்ள காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக பனைக்குளம் மேலதெருவைச் சோ்ந்த செல்லத்துரை (60) கொலை செய்திருக்கலாம் என சந்தேகமடைந்த போலீஸாா் அவரை தேடி வந்தனா். இதற்கிடையே, இந்த கொலை சம்பவம் தொடா்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த செல்லத்துரை தூத்துக்குடி நான்காவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் நேற்று சரணடைந்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes





Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory