» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 7:45:32 AM (IST)
தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணியிட பாதுகாப்பு, சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில இணை செயலாளர் சந்தண சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பிரான்சிஸ், டி.ஜி.டி.இ.யு மாவட்ட தலைவர் புங்கலிங்கம், எல்.எல்.எப் மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சின்னத்துரை வரவேற்று பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன், டி.ஜி.டி.இ.யு. மாநில பொதுச் செயலாளர் ராஜா ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 8:16:47 PM (IST)

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்!
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:54:31 PM (IST)

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்து சேவை: அரசு போக்குவரத்துக்கழகம்
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:26:33 PM (IST)

கரோனா நோயாளிகளை கண்காணிக்க வேண்டும் : ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:21:32 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:10:10 PM (IST)

விழாக்களில் 50%பேருக்கு அனுமதி அளிக்க வேண்டும் : ஒலி ஒளி அமைப்பாளர் சங்கம் கோரிக்கை
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:57:34 PM (IST)
