» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண வீட்டில் மணமகளின் தந்தை குத்தி கொலை : தூத்துக்குடி அருகே பயங்கரம்!!

வியாழன் 25, பிப்ரவரி 2021 9:37:06 PM (IST)

தூத்துக்குடி அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறில் மணமகளின் தந்தை குத்தி கொலை செய்ய்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள புளியமரத்து அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூரன் மகன் சண்முகராஜ் (43). இவரது மகளுக்கு அதே கிராமத்தில் இன்று காலை திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பின்னர் சண்முகராஜ் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஏசைய்யா மகன் இமானுவேல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த இமானுவேல் பீர்பாட்டிலை உடைத்து சண்முகராஜாவை குத்தியுள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ரூரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மகளின் திருமணம் முடிந்த அதே நாளில் தந்தையை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory