» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 27ம் தேதி ராகுல்காந்தி பிரசாரம் : தனி விமானம் மூலம் வருகை

வியாழன் 25, பிப்ரவரி 2021 8:05:36 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 27ம் தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ பி சி வி சண்முகம் தூத்துக்குடிமாநகர் மாவட்ட தலைவர்  சி எஸ் முரளிதரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் "ராகுல் காந்தி வருகிற 27ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தலைவர் தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தருகிறார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி வ.உ.சி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் 20 நிமிடம் கலந்துரையாடல் நிகழ்சியில் பங்கேற்கிறார். 

இதனையடுத்து 11.45 மணிக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு முன்பு நடைபெறும் முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதனைத் தொடர்ந்து  கோவங்காடு அருகே உள்ள உப்பளத்தில் வைத்து உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்  நிகழ்சியில் பங்கேற்கிறார். அதன் பின்னர், அவர்களுடன் மதிய உணவு அருந்துகிறார்.  தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முக்காணியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குரும்பூர், ஆழ்வார் திருநகரி, நாசரேத், சாத்தான்குளம் வழியாக பின்னர் நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir ProductsBlack Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory