» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விசைப்படகில் சென்ற 16 மீனவர்கள் சிறைபிடிப்பு

வியாழன் 25, பிப்ரவரி 2021 10:46:15 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து விசைப்படகில் சென்ற 16 மீனவர்களை இடிந்தகரை மீனவர்கள் சிறைபிடித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து லயன்ஸ் டவுண் பகுதியைச்  சேர்ந்த ஜெனீஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 16 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர. இவர்கள் நெல்லை மாவட்டம், இடிந்தகரை கடற்கரைப் பகுதியில் சென்றதாக கூறி அப்பகுதி மீனவர்கள் தூத்துக்குடி மீனவர்களின் விசைப்படகை சுற்றிவளைத்து சிறைபிடித்து, கடற்கரைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 

பின்னர் அவர்கள் தூத்துக்குடி மீனவர்களை தாக்கியதாகவும், இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் இடிந்தகரைக்குச் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர். மீனவர்கள் விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மக்கள் கருத்து

tamilanFeb 26, 2021 - 01:02:07 PM | Posted IP 108.1*****

இங்கேயே ஒற்றுமை இல்லை .இந்த நிலையில் இலங்கையை எப்படி குறை சொல்வது .

IndianFeb 25, 2021 - 11:24:21 AM | Posted IP 173.2*****

If it is in Ceylon, all the people will condemn Modi.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Nalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory