» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டை அகல ரயில் பாதை பணிகள் நிறைவு : 28ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

புதன் 24, பிப்ரவரி 2021 9:36:43 PM (IST)

கோவில்பட்டி - திருநெல்வேலி அகல ரயில் பாதையில் வருகிற 28ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. 

கோவில்பட்டி - கடம்பூர் மற்றும் கங்கைகொண்டான் - திருநெல்வேலி ரயில் பிரிவுகளில் இரட்டை அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த புதிய இரட்டை அகல ரயில் பாதையில் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் பிப்ரவரி 26 அன்று ஆய்வை துவக்க இருக்கிறார். 

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பிப்ரவரி 26 அன்று கோவில்பட்டியிலிருந்து கடம்பூர் வரை புதிய அகல இரட்டை ரயில் பாதையை ஆய்வு செய்கிறார். பிப்ரவரி 27 அன்று கங்கைகொண்டானில் இருந்து திருநெல்வேலி வரை புதிய இரட்டை அகல ரயில் பாதையை மோட்டார் டிராலி மூலமாக ஆய்வு செய்ய இருக்கிறார். 

பிப்ரவரி 28 அன்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள புதிய இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்ய இருக்கிறார். எனவே இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தின் போது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir Products


Thoothukudi Business Directory