» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எஸ்.ஐ கொலை வழக்கில் கைதானவர் உட்பட 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

புதன் 24, பிப்ரவரி 2021 3:44:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.ஐ கொலை வழக்கில் கைதானவர் உட்பட 4பேர் இன்று  ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு, கடந்த 01.02.2021 அன்று இரவு ரோந்து பணியின் போது சரக்கு வாகனத்தை பயன்படுத்தி கொலை செய்த வழக்கில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து,  தீப்பாச்சி நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் (39) என்பவரை ஆய்வாளர் முத்துலட்சுமி  கைது செய்தார். 

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னதுரை (29) என்பவர் அதே பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணை 11.02.2021 அன்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாரட். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் அறிக்கை அளித்தார்.

மேலும், கடந்த 31.01.2021 அன்று சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட மேல்மந்தை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாடசாமி (65) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆய்வாளர் ரமேஷ் அறிக்கை அளித்தார். 

சேராகுளம், செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் 2 செல்போன்கள் மற்றும்  6 இருசக்கர வாகனங்களை திருடிய ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கந்தசாமி (எ) கண்ணன் (22) மற்றும் வெல்லூர் வேதக்கோவில் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (19) ஆகியோர் மீது சேராகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

மேற்படி வழக்கின் முக்கிய எதிரியான கந்தசாமி (எ) கண்ணன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்ராஜசுந்தர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். மேற்படி காவல் ஆய்வாரள்களின் அறிக்கையின் அடிப்படையில் 4 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
 
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் 4பேர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.  அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 4  எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.


மக்கள் கருத்து

ஒருவன்Feb 24, 2021 - 08:50:35 PM | Posted IP 173.2*****

சரி . சாத்தான்குளம் 2 பேரை கொன்ற கொலை குற்றவாளிக்கு என்ன சட்டம்/தண்டனை கிடைத்தது???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamThalir ProductsBlack Forest Cakes
Thoothukudi Business Directory