» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறையில் இருந்து ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக் கொலை

புதன் 24, பிப்ரவரி 2021 12:16:58 PM (IST)

சாத்தான்குளம் அருகே ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி போலீசில் சரண் அடைந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கீழ பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் யோவான் (31). இவர் கடந்த 12.11.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது யோவான், சிறையில் இருந்து ஜாமீனில் வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் தந்தையான   அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை (60) என்பவர் யோவானை பழிவாங்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று காலை கீழ பனைக்குளம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த யோவானை, செல்லத்துரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கையை துண்டித்து அவரது வீட்டின் வாசலில் போட்டுவிட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் யோவான் உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Black Forest Cakes

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory