» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருடன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 8:32:37 AM (IST)தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள சரண்யா அறியை, நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் தலைவர் விநாயகம் மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாநகராட்சி ஆணையரிடம் அளித்தனர். அந்த மனுவில், "பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் கடைகளுக்கு வாடகை கட்டுவதற்கு சில மாதங்கள் தவணையும் வாடகை குறைப்பு செய்ய வேண்டும். 

பழைய மாநகராட்சி எதிர்புறம் அமைந்துள்ள பாடர் பஜார் பகுதியில் உள்ள கடைகளை கழிவு நீர் கால்வாய் சீர் செய்வதற்காக அகற்றப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் உடனடியாக கடைகளை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில், தூத்துக்குடி நகர மத்திய சங்க செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் செந்தில் ஆறுமுகம், நகர பொருளாளர் ராஜலிங்கம், இணை செயலாளர் தெர்மல் ராஜா, பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், அன்னராஜன், செபஸ்தியான் மற்றும் பார்டர் பஜார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

sellvamFeb 23, 2021 - 01:04:09 PM | Posted IP 108.1*****

manakaratchi malai neer vadikal pakuthiyilkadaykal amaykka anumathi kodukkatheerkal madam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thalir Products
Thoothukudi Business Directory