» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்: ஒபாமா மீது டிரம்ப் விமர்சனம்!!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:52:07 AM (IST)
ஒன்றும் செய்யாத பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கடந்த 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச ராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு போர்களை தான் நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது டிரம்புக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை. ஆனால் அவர்கள் (நோபல் பரிசு குழு) என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் அதற்காக அதை செய்யவில்லை என்பது எனக்கு தெரியும்.
நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றவே அதை செய்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பரிசு கிடைத்தது. ஆனால் அவர் நம் நாட்டை அழித்தார். ஒபாமா ஒரு நல்ல அதிபர் அல்ல என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 10:30:31 AM (IST)

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)

பாகிஸ்தானில் பிரபல மதகுரு சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்
செவ்வாய் 5, மே 2026 4:23:41 PM (IST)

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 21 பேர் பலி; 61 பேர் படுகாயம்!
செவ்வாய் 5, மே 2026 11:14:44 AM (IST)

வெறும் காகிதப் புலிகள்: அமெரிக்காவின் முற்றுகை மிரட்டலுக்கு உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை!
சனி 2, மே 2026 11:42:48 AM (IST)










