» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: டிரம்ப் புலம்பல்

வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:06:50 PM (IST)



இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி சிரித்துப் பேசி கலந்துரையாடினார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சீனாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், சீனாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசிய புகைப்படத்தை பதிவிட்டு, "இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் நீடித்த ஒற்றுமையுடன், வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory