» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான உரிமை மீறல்: வட கொரியா கண்டனம்!
திங்கள் 23, ஜூன் 2025 11:32:50 AM (IST)
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், "மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செயல்களால் தற்போது மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்.நாங்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையால் நசுக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரை உருவாக்கும் செயல்களுக்கு எதிராக நீதியான சர்வதேச சமூகம் ஒருமனதாக கண்டனம் மற்றும் நிராகரிப்பு குரலை எழுப்ப வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரானும் வட கொரியாவும் தங்களுக்குள் பல வகைகளில் நட்புறவை பேணி வருகின்றன. மேலும் வடகொரியா ஈரானுக்கு ராணுவ ஒத்துழைப்பும் வழங்குவதாக அவ்வப்போது பேச்சுகள் எழுந்துள்ளது. அதேபோல பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுதங்களையும் வடகொரியா ஈரானுக்கு வழங்குவதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 10:30:31 AM (IST)

சுற்றுலா கப்பலில் ஹண்டா வைரஸ் பீதி: 3 பேர் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம்!
வியாழன் 7, மே 2026 4:55:52 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியில் போர் நிறுத்தம்? - ஈரானுடன் ஒப்பந்தம் செய்யத் தயாராகும் டிரம்ப்..!
புதன் 6, மே 2026 11:40:28 AM (IST)

பாகிஸ்தானில் பிரபல மதகுரு சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்
செவ்வாய் 5, மே 2026 4:23:41 PM (IST)

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 21 பேர் பலி; 61 பேர் படுகாயம்!
செவ்வாய் 5, மே 2026 11:14:44 AM (IST)

வெறும் காகிதப் புலிகள்: அமெரிக்காவின் முற்றுகை மிரட்டலுக்கு உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை!
சனி 2, மே 2026 11:42:48 AM (IST)











தேச பக்தன்Jun 23, 2025 - 03:14:47 PM | Posted IP 162.1*****