» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய இந்தியா விருப்பம்: டிரம்ப் சொல்கிறார்
ஞாயிறு 18, மே 2025 11:11:41 AM (IST)
அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்துசெய்ய இந்தியா விரும்புகிறது என்று டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அமெரிக்க பொருட்கள் மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்து செய்ய இந்தியா விரும்புவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.இந்நிலையில், அமெரிக்க செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வர்த்தகம் செய்வதை ஏறத்தாழ சாத்தியமற்றதாக அவர்கள் ஆக்கி விட்டனர். அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரிவிதிப்பை 100 சதவீதம் ரத்து செய்ய இந்தியா விரும்புவது உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். ஆனால் நான் அவசரப்படவில்லை. ஒவ்வொரு நாடும் எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. தென்கொரியா எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் எல்லா நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. அதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப் போகிறேன். ஒப்பந்தம் செய்ய 150 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அதே சமயத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வர்த்தக ஒப்பந்தம் குறித்து தெரிவித்த கருத்து, முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது சிக்கலான ேபச்சுவார்த்தை. எந்த வர்த்தக ஒப்பந்தமும் இருதரப்புக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். இதுதான் வர்த்தக ஒப்பந்தம் பற்றிய எங்களது எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை
இதற்கிடையே, மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோவர்டு லுட்னிக், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் சில வரிச்சலுகைகளை எதிர்பார்க்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)









SOORIYANமே 18, 2025 - 11:26:21 AM | Posted IP 172.7*****