» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்
திங்கள் 24, மார்ச் 2025 5:26:06 PM (IST)
நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வரும் போப் பிரான்சிஸ் (88), கடந்த பிப்ரவரி 14-ந்தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஏற்கனவே நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது.இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற்றார். வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்புகளால் போப் அவதிப்பட்டு வருகிறார் என்றும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில், அவருக்கு சுவாச குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது என்றும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறினார்.
இதனால், உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டனர். தொடர்ந்து 5 வாரங்களாக சிகிச்சையில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறியுள்ளார். பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் இருந்து வரும் அவர் மருத்துவமனையின் பால்கனியில் இருந்து, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.
அவரை பார்க்க கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி புன்னகையையும் வெளிப்படுத்தினார். இந்த சூழலில், நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். இதன்பின்னர், அவர் வாடிகனுக்கு செல்வார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)

ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

மிக நீண்ட போருக்கு ஈரான் தயார்: மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் அழைப்பு!
புதன் 4, மார்ச் 2026 5:14:56 PM (IST)

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடித் தொடர்கிறது : டிரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 5:19:47 PM (IST)

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி - கொலையாளி சுட்டுக்கொலை!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:00:56 PM (IST)

மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்: ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:31:26 PM (IST)









