» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி: 35 பேர் உயிரிழப்பு; மீட்புப்பணிகள் தீவிரம்!

திங்கள் 17, மார்ச் 2025 5:47:47 PM (IST)



அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது வருகிறது. 

அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை சூறாவளியில் தூக்கி வீசப்பட்டது. 

சூறாவளியால் பல வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சூறாவளியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

டெக்சாஸ், ஒக்லஹோமா, அர்கான்சாஸ், மிசவுரி, இல்லினாய்ஸ், இன்டியானா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பலத்த காற்றால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டு 2 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே, அமெரிக்காவில் காட்டுத்தீ பரவல், புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors






Thoothukudi Business Directory