» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடாவின் மார்க் கார்னியின் அமைச்சரவையில் 2 இந்திய பெண்களுக்கு வாய்ப்பு
திங்கள் 17, மார்ச் 2025 12:25:02 PM (IST)

கனடாவில் பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இந்திய பெண்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவரது செல்வாக்கு சரிந்ததை அடுத்து, அவர் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடாவின் புதிய பிரதமராகவும் மார்க் கார்னி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து அவர் கனடாவின் 24-வது பிரதமராக கடந்த இரு தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். இந்த நிலையில் மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவியேற்றது. 13 ஆண்கள், 11 பெண்கள் என 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மார்க் கார்னியின் புதிய அமைச்சரவையில் இந்திய பெண்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கமல் கேரா மற்றும் அனிதா ஆனந்த் ஆவர். 36 வயதான கமல் கேராவுக்கு சுகாதாரத்துறையும், 58 வயதான அனிதா ஆனந்துக்கு புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கமல் கேரா டெல்லியில் பிறந்தவர் ஆவர். அவர் பள்ளியில் படிக்கும்போதே குடும்பத்துடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அவர் டொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்வான இளம் வயது பெண்களில் கமல் ரேகாவும் ஒருவர் ஆவார். அவர் முதல் முறையாக கடந்த 2015-ம் ஆண்டு எம்.பி.யாக தேர்வானார்.
அதேபோல கனடாவில் இந்திய தாய்-தந்தைக்கு பிறந்த அனிதா ஆனந்த், வக்கீலாக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஆவார். கமல் கேரா, அனிதா ஆனந்த் ஆகிய இருவரும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர் என்பதும், தற்போது அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஷேக் ஹசினாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடிய வங்கதேச இடைக்கால அரசு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:41:11 AM (IST)

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்க இறக்குமதி இறைச்சியில் பாக்டீரியா பாதிப்பு? தடை விதிக்க சீனா முடிவு!!
புதன் 16, ஏப்ரல் 2025 12:46:01 PM (IST)

ஹமாசுக்கு ஆதவு: இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:52:32 AM (IST)
