» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை: பாகிஸ்தான் நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

வெள்ளி 17, ஜனவரி 2025 5:45:11 PM (IST)



அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம். 

அல்-காதர் அறக்கட்டளை வழக்கு, இம்ரான் கானும் அவரது மனைவியும் சட்டவிரோதமாக பஹ்ரியா டவுன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பல பில்லியன் கணக்கான ரூபாய் மற்றும் நிலத்தை சட்டவிரோதமாகப் பெற்று,, அதற்கு ஈடாக இங்கிலாந்து அரசால் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 50 பில்லியன் பவுண்டுகளை சட்டப்பூர்வமாக்கியதாக குற்றம்சாட்டப்படுவது தொடர்புடையதாகும். என்.ஏ.பி, டிசம்பர் 2023 இல் இம்ரான் மற்றும் புஷ்ரா பீபி ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

190 மில்லியன் பவுண்டு அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடியாலா சிறையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நசீர் ஜாவேத் ராணா இன்று தீர்ப்பை அறிவித்தார்.

மேலும், இம்ரான் கானுக்கு 1 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மற்றும் புஷ்ரா பீபிக்கு அரை பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தண்டனை பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பர் மாதமே வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு, இம்ரான் கான் - புஷ்ரா பீபி தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே புஷ்ரா பீபி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory