» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் மாளிகையின் தலைமை அதிகாரியாக பெண் நியமனம்: டிரம்ப் நடவடிக்கை

சனி 9, நவம்பர் 2024 10:42:38 AM (IST)



அமெரிக்க அதிபர் மாளிகையின் தலைமை அதிகாரியாக முதன்முறையாக ஒரு பெண்ணை நியமித்து டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப் வெற்றி பெற்றார். ஜன.20ம் தேதி அவர் அதிபராக பதவி ஏற்க உள்ள நிலையில் தற்போது முதல் ஆட்சி மாற்றம் தொடங்கி உள்ளது. டிரம்ப்பின் முதல் நடவடிக்கையாக அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிலும் முதன்முறையாக அந்த பதவிக்கு ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரச்சார பணியை நிர்வகித்து வந்த சூசி வைல்ஸ் என்பவரைத்தான் டிரம்ப் நியமித்து உள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது,’சூசி புத்திசாலி. புதுமை விரும்பி, உலகளவில் மதிக்கப்படுகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில் அவர் அயராது பாடுபடுவார். அதற்கான உழைப்பை கொடுப்பார் என நம்புகிறேன். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக இருக்க சூசி தகுதியானவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் வாழ்த்து கடிதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். டிரம்ப்பிற்கு எழுதிய கடிதத்தில்,’ அமெரிக்காவின் 47 வது அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன்.

உங்கள் தலைமையின் கீழ், நமது நாடுகள் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். கமலா ஹாரிசுக்கு எழுதிய கடிதத்தில்,’ உங்கள் உற்சாகமான ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையின் ஒருங்கிணைக்கும் செய்தி தொடர்ந்து பலரை ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory