» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட வட கொரியா வீரர்கள் 10 ஆயிரம் பேர் ரஷியா வருகை

வியாழன் 31, அக்டோபர் 2024 9:30:11 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக வடகொரியாவை சேர்ந்த வீரர்கள் 10 ஆயிரம் பேர் ரஷியாவுக்கு வருகை தந்தனர்.

வல்லரசு நாடான ரஷியாவின் அண்டை நாடாக உக்ரைன் உள்ளது. இந்தநிலையில் நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக உக்ரைன் கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது. இதனால் கோபம் அடைந்த ரஷியா, உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கியது.

3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நோட்டோ நாடுகளில் ஆதரவோடு உக்ரைன் ராணுவம் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இரு தரப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் போரின் தீவிரம் குறையாமல் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு உக்ரைன் அருகே உள்ள ரஷியாவின் எல்லை மாகாணமான குர்ஸ்க், உக்ரைன் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. தரைவழி தாக்குதலுக்கு மூலோபாய மையமாக கருதப்படும் குர்ஸ்க் மாகாணத்தை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது ரஷியாவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. மேலும் குர்ஸ்க் மாகாணத்தை மீட்கும் முயற்சியில் ரஷியா ராணுவத்தின் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. இதனால் ரஷியா ராணுவத்தினர் எதிர்க்கால ராணுவ திட்டங்களை முன்னிறுத்த முடியாமல் தடுமாறின.

இந்தநிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளது. அதிபர் கிம் ஜான் அன் தன் ராணுவத்தின் அதிசிறப்பு படையை சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வழங்கி உள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனை எதிர்த்து சண்டையிட உள்ள வடகொரியா வீரர்கள் குர்ஸ்க் நகரில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கான முழு செலவையும் ரஷியா ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சீருடைகள், போலி அடையாள ஆவணங்களை வழங்கி வடகொரியா வீரர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory