» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும்: உக்ரைன் அதிபர்
செவ்வாய் 29, அக்டோபர் 2024 5:11:51 PM (IST)
இந்திய பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி: இந்திய பிரதமர் மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். அவரால் உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று இந்தியா. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகள் கொண்டது. சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ரஷ்யா அத்துமீறி செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவின் அத்துமீறல்களால் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். வேறு வழியின்றி ரஷ்யா அதிபர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவருவார்.
உக்ரைனில் குளிர்காலம் துவங்க உள்ளது. இந்த நேரத்தில் உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மின் நிலையங்களை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த இக்கட்டான சூழலில் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் கொள்கை மாறினால் உக்ரைனுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
naan thaanNov 22, 2024 - 08:49:00 PM | Posted IP 172.7*****