» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர் கைது

திங்கள் 28, அக்டோபர் 2024 10:42:42 AM (IST)



சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 20 ஆயிரம் பேர், மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர். அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். எனவே சவுதி அரேபியாவுக்குள் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கிறது.

அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சட்ட விரோதமாக குடியேறியதாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory