» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நான் அதிபரானால் அமெரிக்கா-இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும்: டிரம்ப்

செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:36:01 PM (IST)

"அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் அமெரிக்கா-இஸ்ரேல் உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் வலுவடையும்" என டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 5-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புளோரிடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், "அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அதிபராக நான் பதவியேற்றால் அமெரிக்கா-இஸ்ரேல் உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் வலுவடையும். பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன். இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவில் இருக்கும் யூத சமூகத்தினரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவப்படை அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக் கணக்கானோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

tambikalOct 10, 2024 - 03:30:12 PM | Posted IP 172.7*****

ஆமை செபாஸ்டியன் அதிபர் ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உறவு மேலும் வலுவடையும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory