» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் மீதான தாக்குதலில் பங்கேற்க மாட்டோம்: பிரான்ஸ், பிரிட்டன் திட்டவட்டம்!

வியாழன் 3, அக்டோபர் 2024 10:56:29 AM (IST)



ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன.

ஈரானின் ஆதரவு பெற்ற காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் தலைவர்களை கொன்றது. இதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் தாக்கியது.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் ஈரானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிரத் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது.

இருப்பினும், இஸ்ரேல் நாட்டின் மக்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினிடமும் தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை கேட்டறிந்தார். மேலும், போர்ப் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனும் தொலைப்பேசியில் ஸ்டார்மர் நேற்று கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory