» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் இதுவரை ரூ.7,016 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் - தமிழக அரசு தகவல்!

வியாழன் 12, செப்டம்பர் 2024 5:27:44 PM (IST)



அமெரிக்காவில் இதுவரை 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்து வருகிறார்.  இன்று (செப்டம்பர் 12) முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களை விரிவுப்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

கட்டுமானம், சுரங்க கருவி, இயற்கை எரிவாயு இயந்திரம், டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை கேட்டர்பில்லர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. டிராக்டர், வீல் லோடர்கள், மோட்டார் கிரேடர்கள், என்ஜின் உள்ளிட்டவற்றை கேட்டர் பில்லர் தயாரிக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார். அமெரிக்காவில் இதுவரை 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory