» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன்: சிகாகோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

ஞாயிறு 8, செப்டம்பர் 2024 5:06:45 PM (IST)



தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன் என்று சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர், தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுளை ஈா்த்துவிட்டு செப். 14-ஆம் தேதி திரும்பி வரும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அதில், திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருக்கிறேன். ஆனால், வரவேற்பு லேட்டஸ்ட்டாக உள்ளது. தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள்.

நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரம், மகிழ்ச்சியான முகங்கள் என் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள், அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள்.

வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள். திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள். உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ஆம் நாளை அயலகத் தமிழர் நாளாக கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, ‘தமிழால் இணைவோம்’, ‘உலகெங்கும் தமிழ்’, ‘தமிழ் வெல்லும்’ ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்’ என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அயலகத் தமிழர்க்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது! அயல்நாடுகளில் பணிக்குச் சென்று, அங்கு இறக்க நேரிடுபவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory