» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக புதின் அறிவிப்பு
வெள்ளி 6, செப்டம்பர் 2024 9:26:02 AM (IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநா யக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புதின், "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.
கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது. முன்பு அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷியாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)








