» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குழந்தைகள் செல்போன், டி.வி. பார்க்க தடை : சுவீடன் அரசு அதிரடி உத்தரவு!

புதன் 4, செப்டம்பர் 2024 11:39:12 AM (IST)

சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. பார்க்க தடை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். அதேசமயம் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. 

இதனால் சுவீடனில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம்.

13 முதல் 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோருக்கு சுவீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory