» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புருனே நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 5:17:09 PM (IST)



புரூனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா - புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக இன்று காலை புரூனே புறப்பட்டு சென்றார். அங்கு புரூனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்க உள்ளார். இதன்மூலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

புரூனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே தலைநகர் பண்டார் செரி பெகவான் பகுதியில் அவர் தங்கவுள்ள ஹோட்டலில் இந்திய வம்சாவளியினர் நம் தேசியக்கொடியுடன் நின்று, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory