» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை வீச்சு; 18 பேர் சாவு

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 12:00:23 PM (IST)



காசாவில் பள்ளி வளாகம் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனைதொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றுள்ள பணய கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது வாலிபர் ஒருவர் கூட்டத்துக்குள் திடீரென புகுந்து கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீன வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான் தாக்குதல் நடத்தியது. அங்கு பொது மக்கள் தஞ்சமடைந்துள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 18 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் மேற்கு கரையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த தளபதி உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.


மக்கள் கருத்து

அதான்Aug 5, 2024 - 04:38:00 PM | Posted IP 172.7*****

ஹமாஸ் தீவிரவாதிகள் பள்ளிக்கூட்டத்தில் உள்ளே புகுந்து ஒளிந்து கொண்டு ராக்கெட் வீசுவார்கள் அதானே குண்டுபோட்டது சரிதான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory