» செய்திகள் - விளையாட்டு » உலகம்

என்னைத் தேர்ந்தெடுத்தால் வாக்களிக்க வேண்டியிருக்காது : டிரம்ப் அழைப்பு

ஞாயிறு 28, ஜூலை 2024 8:19:06 PM (IST)

கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் பங்கேற்ற டிரம்ப் கிறிஸ்தவர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், ``நான் கிறிஸ்தவர்களை நேசிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்துவன். கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம், அது உங்களுக்கே தெரியும். ’’ என்று கூறினார்.

பிரசாரத்தில் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு என்ன அர்த்தம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. டிரம்ப் பேசியது குறித்து விளக்கமளிக்கக் கோரியும் விளக்கமளிக்கப்படவில்லை. இருப்பினும், டிரம்ப் பேசியது குறித்து, பிரசாரத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கிடம் கேட்டபோது, ``டிரம்ப் நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார்’’ என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory