» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு : 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
புதன் 24, ஜூலை 2024 12:02:50 PM (IST)

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமானோர் புதைந்தனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை வரை 55 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னரும், அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன.
இதனால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிலர் மண் சரிவுகளின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்ட செங்குத்தான மலைப் பகுதியில் மீட்பு பணி நடைபெற்றபோது அந்த இடத்தில் நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இந்த பேரழிவு அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்
திங்கள் 24, மார்ச் 2025 5:26:06 PM (IST)

கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 10:07:56 AM (IST)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்; 44 பேர் பலி
ஞாயிறு 23, மார்ச் 2025 9:53:19 AM (IST)

நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரிக்கை: அமெரிக்க நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீடு!
சனி 22, மார்ச் 2025 5:38:27 PM (IST)

அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்!
சனி 22, மார்ச் 2025 11:00:16 AM (IST)

அமெரிக்க அரசின் கல்வித்துறை கலைப்பு: அதிபர் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!
வெள்ளி 21, மார்ச் 2025 11:15:31 AM (IST)
