» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடா பூங்காவில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய வாலிபர் கைது!

வெள்ளி 12, ஜூலை 2024 11:51:31 AM (IST)

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள நீர் பூங்காவில் இளம்பெண்கள், சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கனடா நாட்டின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் மான்க்டன் நகரில் நீர் பூங்கா ஒன்று உள்ளது. இதில், 25 வயது இந்திய வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அவர் பூங்காவுக்கு வரும் சிறுமிகள், இளம்பெண்கள் என பலரை கட்டிப்பிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதுபற்றி 12 பேர் போலீசில் புகார் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவ பகுதியில் வைத்து அந்நபரை கைது செய்தனர். இந்த வழக்கு வருகிற அக்டோபர் 24-ந்தேதி மான்க்டன் மாகாண கோர்ட்டில் நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில், பெற்றோர் அவர்களுடைய மகள்களிடம் பேசும்படி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். இதில், பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட நபராக இருப்பவர்கள் ராயல் கனடா போலீசை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

அந்நபரின் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அந்த நபரின் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார். மற்ற பெற்றோர்களையும் எச்சரித்து உள்ளார். அந்நபர் வேறு சில இந்திய வாலிபர்களுடன் ஒரு குழுவாக சுற்றி திரிய கூடும் என சந்தேகமும் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory