» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி

புதன் 31, மே 2023 4:38:14 PM (IST)



வட கொரியா நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதால், தனது இராணுவ திறன்களை அதிகரிக்க முதல் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ராக்கெட் கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் அதன் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களை பிரித்ததைத் தொடர்ந்து, உந்துதலை இழந்த காரணத்தால், நடுவானில் வெடித்து கடலில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல்விக்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாகவும் அது கூறியுள்ளது. வட கொரியாவின் முக்கிய விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ள வடமேற்கு டோங்சாங்-ரி பகுதியில் இருந்து காலை 6:30 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. இதனால், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், எந்த ஆபத்தும் அல்லது சேதமும் ஏற்படாததால் எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory