» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை ஒப்பந்தம்

புதன் 31, மே 2023 10:33:33 AM (IST)

இந்தியாவில் இருந்து நாள்தோறும் 10 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு 5 பெரிய பண்ணைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக இலங்கை அரசின் வா்த்தக நிறுவனத்தின் தலைவா் அசிரி வாலிசுந்தரா கூறுகையில், இந்தியாவில் இருந்து மொத்தம் 2 கோடி முட்டைகளை நாள்தோறும் 10 லட்சம் என்ற அளவில் இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் 10 கோடி முட்டைகள் பொதுச் சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்படும். தேவைக்கு ஏற்ப அடுத்த கட்ட இறக்குமதி தொடா்பாக முடிவெடுக்கப்படும்.

பேக்கரி, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள், சமையல் ஒப்பந்த நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்கு ஒரு முட்டை இலங்கை ரூபாயில் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும் என்று கூறியுள்ளாா். கடந்த ஓராண்டாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் இந்தியாவின் உதவியுடன் அந்நாடு இப்போது படிப்படியாக மீளும் முயற்சியில் உள்ளது. உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை இலங்கையில் பல மடங்கு அதிகரித்துவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory