» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்: காந்தி சிலை அவமதிப்பு!

சனி 25, மார்ச் 2023 11:47:49 AM (IST)



கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். 

இந்நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். 6 அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலை மீது பெயிண்டை ஊற்றியுள்ளனர். சிலையின் அடிப்பாகத்தில் இந்திய அரசு, பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து வாசகங்களை எழுதியுள்ளனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்க விட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

அவனுகMar 25, 2023 - 05:48:32 PM | Posted IP 162.1*****

எல்லாரையும் இந்தியா திருப்பி அனுப்புங்க... எல்லாம் சரி ஆகிடும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory