» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் குண்டு கண்டெடுப்பு; 3ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

சனி 21, ஜனவரி 2023 11:58:42 AM (IST)



மேற்கு ஜெர்மனியில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2-ம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசியது. அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து போன நிலையில், அவை அவ்வப்போது கண்டெடுக்கப்படுகின்றன. 2-ம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசியது. அவற்றில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து போன நிலையில், அவை அவ்வப்போது கண்டெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மேற்கு ஜெர்மனியில் எசன் நகரில் புனரமைப்பு பணிகளுக்கான குழி தோண்டியபோது, 2-ம் உலகப்போரில் அமெரிக்காவால் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஜெர்மனி ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்ணுக்கு அடியில் புதைந்து இருந்த வெடிகுண்டை பத்திரமாக அகற்றினர். 

500 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் அந்த குண்டை செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எசன் மற்றும் அதன் அருகில் உள்ள ஓபர்ஹவுசன் ஆகிய 2 நகரங்களில் இருந்து 3 ஆயிரத்து 300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

GOD IS GREATJan 22, 2023 - 06:02:39 PM | Posted IP 162.1*****

சர்வாதிகார ஹிட்லர் ஐ ஆதரித்தால் இப்போ வரை பயம் இருக்கட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory