» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாட்டின் தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது: ரிஷி சுனக்

வெள்ளி 20, ஜனவரி 2023 10:14:30 AM (IST)

பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் ஆவண படத்திற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

"இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான பிபிசி-யின் ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.யூடியூபில் வெளியான இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி டெல்லியில் நேற்று கூறும்போது, "இந்தியாவுக்கு எதிராக ஆவணப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பிபிசி ஆவண படத்தில் பாரபட்சம், காலனி ஆதிக்க மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த ஆவண படம் கண்ணியமானது இல்லை” என்றார்.

பிபிசி ஆவண படம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட எம்.பி.இம்ரான் ஹூசைன் நேற்று பிரச்சினை எழுப்பினார். அப்போது பிரதமர் ரிஷி சுனக் குறுக்கிட்டுப் பேசுகையில், "குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory