» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட 4 நகரங்கள் ரஷ்யா உடன் இணைப்பு: புதின் அறிவிப்பு

ஞாயிறு 2, அக்டோபர் 2022 8:41:38 PM (IST)

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் பொது வாக்கெடுப்பையும் நடத்தினர்.

ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ஆக்கிரமித்த ரஷ்யா, பின்னர் வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டதை போல் இந்த நகரங்களையும் தங்களுடன் இணைக்க ரஷ்ய மேற்கொண்ட முயற்சிக்கு உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

எனினும், தற்போது இந்த நகரங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அறிவித்துள்ளார். கிரெம்ளினில் நிகழ்த்திய உரை ஒன்றில், ரஷ்யா உடன் நான்கு புதிய பகுதிகள் இணைந்துள்ளன என்று தெரிவித்து உக்ரைன் நகரங்கள் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory