» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருடன் தொடர்பா? - ஈரான் விளக்கம்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:45:04 AM (IST)

சல்மான் ருஷ்டியைக் கொல்ல முயன்ற நபருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது.

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் ஜாபர் தெரிவித்தார். இந்நிலையில், சல்மான் ருஷ்டியைக் கொல்ல கத்தியுடன் நுழைந்த மர்ம நபருக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என ஈரான் அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory